தலைவன் படுகொலைக்குப் பழிக்குப் பழி: பாக்.கில் பயங்கர தாக்குதல் நடத்த தாலிபன்கள் திட்டம்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கி தங்கள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழை வாங்கும் செயலாக பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி அங்குள்ள பெரும் தலைவர்களைக் கொல்ல தாலிபன் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் குண்டு வீசியதில் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்க தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார். தலைவரின் இழப்பால் அந்நாட்டு தாலிபன் அமைப்பு தள்ளாடிப் போனது.
பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சு நடத்த ஆர்வமாக இருந்த மெஹ்சூத்தை அமெரிக்கா படுகொலை செய்த விஷயத்தில் பாகிஸ்தான் தனது கண்டனத்தைப் பதிவு செய்தபோதும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானிற்கும் பங்கிருப்பதாகவே தாலிபன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தாகுதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய தலைவர்....
சமீபத்தில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பின் புதிய தலைவராக முல்லா பஸ்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் ஒருவர் மட்டுமே எதிர்க்க, மற்ற உறுப்பினர்களான தளபதிகள் பஸ்துல்லாவுக்கு திட்டத்துக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரியத் தாக்குதல்....
இந்நிலையிஅல், தலைவர் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக குண்டு வெடிப்புகள், துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதல்களை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டம் தீட்டி வருவதாக தலிபான் மூத்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சிதற வைப்போம்...
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘இது அமெரிக்காவின் கைப்பாவையான பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தும் முதல் தாக்குதலாகும். ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷியா வெளியேற வைத்த நாங்கள் பாகிஸ்தானையும் சிதற வைப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்கள்...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் செல்வாக்கு உள்ள பஞ்சாப் மாகாணத்திலுள்ள அரசு அலுவலகங்கள், ராணுவத்துக்கு எதிராக இந்த தாக்குதலை நடத்த புதிய தளபதி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இவருக்கு மற்ற தலிபான்கள் உதவிபுரிவார்களா? என்ற சந்தேகம் இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

தீவிர கண்காணிப்பு....
எனவே பஸ்துல்லா நடவடிக்கைகளை பாகிஸ்தான் உளவுப்பிரிவு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் லஸ்கர்-இ-ஹாங்வி உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் தொடுக்கிறார்கள். தலிபான்களில் ஆதிக்கம் அதிகரிப்பதால் இவர்களும் சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள்ளேயே தாக்குதலை அதிகரித்து வருகிறார்கள்.

ரகசிய ஆலோசனை...
ஆப்கானிஸ்தானில் முல்லா உமர் தலைமையில் இயக்கும் தலிபான்கள் சமீபத்தில் ரகசிய இடத்தில் கூடி பேசியுள்ளார்கள். இது குறித்து அவ்வியக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, ‘அமெரிக்க படைகள் வெளியேறியதும் மூத்த தலைவர்களுடன் முல்லா உமர் ஆலோசிப்பார். சண்டை தேவைப்படுமானால் ஆட்களை தேர்வு செய்து அங்கு அனுப்பி வைப்போம்' எனத் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications