செக் வைத்த பாக்.. வழிபாடு செய்ய குருத்வாரா திறப்பு.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்த நிபந்தனைகள்
குருத்வாராவை திறக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது
இஸ்லாமாபாத்: கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை திறக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதையடுத்து, எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட முன்னெடுப்புகளை அரசு எடுத்ததன் பயனாக, ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
இதனால் ஆங்காங்கே தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகளும் நிலைமைக்கு ஏற்றபடி வெளியிட்டு வருகின்றன.. இதுவே பிற நாடுகளின் நிலைமையாக உள்ளது..

குருத்துவாரா
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ஏராளமான வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தன.. அந்த வகையில் குருத்வாராவும் ஒன்று... இந்நிலையில், மூடப்பட்டுள்ள குருத்வாராவை திறக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது... செப்டம்பர் 22ம் தேதி பாபா குருநானக் தேவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது... இது சீக்கியர்களுக்கு மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும்..

அறிவுறுத்தல்
எனவே அன்றைய தினம் குருத்வாராவில் சீக்கியர்கள் வழிபாடு நடத்த வருவார்கள் என்பதால், அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது... இருந்தாலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று குருத்வாராவுக்கு வரும் அனைவருக்குமே அறிவுறுத்தப்பட்டுள்ளது... ஒரே நேரத்தில் 300 பேருக்கு மட்டுமே குருத்வாராவில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி
மேலும், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவுவதால், இந்தியாவில் இருந்து வரும் சீக்கியர்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும், அந்த அனுமதியை பெற்றால் மட்டுமே பாகிஸ்தானில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட்
அதாவது பாகிஸ்தான் வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும், பாகிஸ்தானிலும் ஆர்ஏடி டெஸ்ட் செய்யப்படும், ஒருவேளை தொற்று உறுதியானால், அவர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.

இந்தியா
இதற்கெல்லாம் காரணம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அரசு இந்தியாவை ஆபத்தான நாடுகள் பட்டியலில் வைத்திருந்தது... இது கடந்த 21ம் தேதியோடு முடிந்து விட்டது எப்போதுமே, சீக்கிய மத குருவான பாபா குருநானக் தேவின் நினைவிடம் உள்ள இந்த குருத்வாராவுக்கு, இந்தியாவில் இருந்து நிறைய சீக்கிய பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம்.. அதனாலேயே இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications