Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 துண்டுகளாக உடைக்கப்படும் பாகிஸ்தான்! பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் - அசீம் முனீர் கையில் பிளான்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்பட பல இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அந்த நாடு கொந்தளிப்புடன் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான்.. நம்மிடம் இருந்து கடந்த 1971 ம் ஆண்டில் பிரிந்து சென்றது. அப்போது நிர்வாக வசதிக்காக கிழக்கு வங்காளம், மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (NWFP) மற்றும் பலூசிஸ்தான் என ஐந்து மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. நம் நாட்டில் எப்படி மாநிலங்கள் தனித்தனியாக உள்ளதோ, அதேபோல் பாகிஸ்தானில் மாகாணங்கள் உள்ளன.

Pakistan provinces

அதன்பிறகு கடந்த 1971ம் ஆண்டில் நம் நாட்டின் உதவியுடன் கிழக்கு வங்காளம் தனி நாடாக உருவானது. அதுதான் தற்போதைய வங்கதேசம். இதனால் மாகாணங்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 4 ஆக சரிந்தது. பிறகு மாகாணங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. மேற்கு பஞ்சாப், பஞ்சாப் ஆனது. NWFP மாகாணம் கைபர் பக்துன்க்வா என பெயர் மாற்றப்பட்டது.

சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இன்னும் அப்படியே உள்ளன. இதற்கிடையே தான் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் ஒருதரப்பு மக்கள் தங்களுக்கு தனி நாடு கோருகின்றனர். அதேபோல் கைபர் பக்துன்க்வாவில் உள்ளவர்களும் தனி அங்கீகாரம் கோரி போராடி வருகின்றனர். இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 2 மாகாணங்களும் பாகிஸ்தான் முப்படை தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஆகியோருக்கு பெரும் சவாலாக உள்ளது. இருவருக்கும் அந்த மாகாண மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் உள்ள மாகாணங்களை தனித்தனியாக பிரித்து புதிய மாகாணங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் என்ற மாகாணங்களை 12 துண்டுகளாக பிரிக்க அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளார். அதனை பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அலீம் கான் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர், ‛‛பாகிஸ்தானின் நிர்வாக காரணங்களாக மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறிய சிறிய மாகாணங்கள் உருவாக்கப்பட உள்ளது. உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது'' அவர் கூறியுள்ளார். இதன்மூலம் மக்களுக்குதிக பிரதிநிதிகள் கிடைப்பார்கள். அதோடு மக்களின் குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

அதன்படி ஒவ்வொரு மாகாணங்களும் தலா 3 பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளன. பஞ்சாப் மாகாணம் என்பது வடக்கு பஞ்சாப், மத்திய பஞ்சாப், மற்றும் தெற்கு பஞ்சாப் என பிரிக்கப்படுகிறது. சிந்து மாகாணம் கராச்சி சிந்து, மத்திய சிந்து, அப்பர் சிந்து என பிரிக்கப்படுகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணம் வடக்கு கைபர் பக்துன்க்வா, தெற்கு கைபர் பக்துன்க்வா, பழங்குடி கைபர் பக்துன்க்வா (பெடரலி அட்மினிஸ்டர்ட் டிரைபல் ஏரியாஸ் - FATA பகுதிகள் உட்பட) என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும்.

இருப்பினும் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் நீண்டகாலமாக புதிய மாகாணங்களை உருவாக்க வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் சேர்ந்து பாகிஸ்தானை 12 துண்டுகளாக பிரிப்பதில் உறுதியாக உள்ளன.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் தனது 4 மாகாணங்களை 12 ஆக பிரிப்பது என்பது உண்மையில் நல்ல விஷயத்தை விட தீமையை தான் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனென்றால் இப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சிந்து மாகாணத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தின் சிந்து மாகாணத்தின் முதல்வரான முராத் அலி ஷா சிந்து மாகாணத்தை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தனது கட்சி ஏற்காது என்று எச்சரிக்கை யெ்தார்.

அதேபோல் சர்வதேச அரசியல் வல்லுநர்களோ பாகிஸ்தான் பிரிட்டிஷ்காரர்கள் போல் பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே பலுசிஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவது பாகிஸ்தான் அரசுக்கு முடியாத காரணமாக உள்ளது.

இதனால் தான் மாகாணங்களை பிரிக்க அந்த நாட்டு அரசு மற்றும் ராணுவம் திட்டமிட்டு இருக்கலாம். பாகிஸ்தானை பொறுத்தவரை புதிய மாகாணங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு உள்ளார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் புதிய மாகாணம் உருவாக்கும் முயற்சியே பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்று வார்னிங் செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் நீண்டகாலமாக மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்ற முயற்சி உள்ளது. ஆனால் இன்னும் சாத்தியமாகவில்லை. இந்த முறையாவது அந்த முயற்சி நிறைவேறுகிறதா? இல்லாவிட்டால் வழக்கம்போல் இந்த முயற்சியும் புஷ்வானமாகுமா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+