இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் வழக்கு: 6 பாக். தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது லாகூரில் இலங்கை அணி வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கை வீர்ர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் உட்பட 8 பேர் பலியாகினர்.

இது தொடர்பான வழக்கு கோட் லக்பத் சிறைச்சாலையில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 6 தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார். வரும் 30-ந் தேதி முதல் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஜூபைர், அப்துல் வஹாப், அட்னன் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஒபைதுல்லா, ஜாவேத், இப்ராஹிம் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் மொஹ்சின் ரஷீத், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications