காதலனை திருமணம் செய்த 17 வயது சிறுமியை எரித்துக் கொன்ற பாக். தாய்
லாகூர்: பாகிஸ்தானில் தனக்கு பிடித்த நபரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமியை அவரது தாயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் ஜீனத் பீபி(17). அவர் மெக்கானிக்கான ஹஸன் கான் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி ஹஸனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் பிடிக்காத ஜீனத்தின் குடும்பத்தார் ஹஸனை தொடர்பு கொண்டு பேசினர். வீட்டிற்கு ஜீனத்தை அனுப்பி வைக்குமாறும், தாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் நைசாகப் பேசி ஹஸனை ஏமாற்றினர்.
அவர்களின் பேச்சை உண்மை என நம்பிய ஹஸன் தனது மனைவி ஜீனத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறி அழுத ஜீனத்தை ஹஸன் சமாதானம் செய்தார்.
இந்நிலையில் ஜீனத்தை அவரது தாய் பர்வீன் நேற்று முன்தினம் கட்டிலில் கட்டி வைத்து பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டார். மகளை கொன்றதும் பர்வீன் தெருவுக்கு ஓடி வந்து தனது குடும்ப பெயரை கெடுத்த மகளை கொன்றுவிட்டதாக சப்தமாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்வீனை கைது செய்தனர். மேலும் ஜீனத்தின் சகோதரர் உள்பட 3 ஆண்களை தேடி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications