விமான பயணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - அமெரிக்காவில் பாகிஸ்தானியர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தில் சிறுமி ஒருவருக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து அயோவா மாகாணத்துக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஒரு அமெரிக்க சிறுமி தனியாக பயணம் செய்தாள்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணி ஒருவர் அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணிடம் புகார்:
பயணத்தின் இடையே அந்த நபர் கழிவறைக்கு சென்றபோது அவரைப் பற்றி சிறுமி, விமான பணிப்பெண்ணிடம் புகார் செய்தார். அவரும் உடனடியாக எப்.பி.ஐ.க்கு தகவல் கொடுத்தார்.

கைது செய்த எப்.பி.ஐ:
பின்னர் விமானம் தரையிறங்கியபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்:
அவர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆசிப் சவுத்ரி என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

வழக்குத் தொடர்ந்த பெற்றோர்:
இந்த நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் முகமது ஆசிப் சவுத்ரி மீதும், தங்கள் மகளுக்கு விமான பயணத்தின்போது தகுந்த பாதுகாப்பு கொடுக்க தவறியதாக விமான நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications