டிவி லைவ் நிகழ்ச்சியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய பாக். தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாகிஸ்தான் செனட் உறுப்பினரும், ஜாமியத்துல் உலமா இஸ்லாம் பாசல் மத கட்சியின் நிர்வாகியுமான ஹபீஸ் ஹம்துல்லா பெண் மனித உரிமை ஆர்வலரை பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.
பாகிஸ்தான் செனட் உறுப்பினரும், ஜாமியத்துல் உலமா இஸ்லாம் பாசல் மத கட்சியின் நிர்வாகியுமான ஹபீஸ் ஹம்துல்லா, வழக்கறிஞர் மஸ்ரூர் மற்றும் மனிதர உரிமை ஆர்வலரான மார்வி சிர்மித் ஆகியோர் நியூஸ் ஒன் தொலைக்காட்சி சேனலின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
அந்த நிகழ்ச்சியில் அவர்கள் பாகிஸ்தானில் நடந்து வரும் கவுரவக் கொலைகள் குறித்து விவாதித்தனர். லைவாக நடந்த நிகழ்ச்சியின்போது மார்வி கூறிய கருத்தால் ஆத்திரம் அடைந்த ஹபீஸ் அவரை பார்த்து உங்களின் மற்றும் உங்களின் தாயின் உடைகளை அவிழ்ப்பேன், பலாத்காரம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.
உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் அதையே செய்யுங்கள் என்று மார்வி கூற ஹபீஸ் அவரை அடிக்க பாய்ந்துள்ளார். இதை பாரர்த்த மஸ்ரூர் ஹபீஸை தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கிடையே நியூஸ் ஒன் சேனலின் பாதுகாவலர்கள் வந்து ஹபீஸை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மார்வி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். ஹபீஸ் நோன்பு வைத்துக் கொண்டு இத்தனையும் செய்துள்ளார் என மார்வி தெரிவித்துள்ளார். மார்வியின் போஸ்ட்டை பார்த்த பலர் ஹபீஸை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications