போரில் ஜெயிச்சிட்டோம்.. ஷாகித் அப்ரிடி செய்ததை பாருங்க.. அடே பொய்யிலும் நியாயம் வேணாமா? ட்ரோல்
இஸ்லாமாபாத்: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கும் பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாதிகள் முகாம், 3 விமானப்படை தளங்களை அழித்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. தயவு செய்து போரை நிறுத்துங்கள் என்றதால் நம் நாடு பாவம் பார்த்து மோதலை கைவிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் ஷாகித் அப்ரிடி கராச்சியில் இந்தியாவை வீழ்த்தியதாக தற்பெருமை பேசிக்கொண்டு வெற்றி பேரணி நடத்தி அவர் பேசிய பேச்சுக்கள் ட்ரோல் மெட்டீரியலாகி உள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக கடந்த வாரம் 7 ம்தேதி நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சுமார் 25 நிமிடம் நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய 3 விமானதளங்கள் அழிக்கப்பட்டன. இதுதவிர பாகிஸ்தானின் ரேடார் உள்பட பல்வேறு வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் செயலிழக்க செய்யப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் மொத்தமாக தோற்றுப்போனது. அந்த நாடு அனுப்பிய ஏவுகணை, ட்ரோன்கள், போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இதனால் கோழைத்தனமாக காஷ்மீர் எல்லையில் அப்பாவிகளை குறிவைத்து ஷெல் தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதால் பாகிஸ்தான் கலங்கிப்போனது. அதுமட்டுமின்றி எங்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. போரை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று பாகிஸ்தானே நம் நாட்டிடம் கெஞ்சியது. இதனால் பாவம் பார்த்து பாகிஸ்தானின் கோரிக்கையை நம் நாடு ஏற்றுள்ளது. ஆனாலும் கூட பயங்கரவாதிகளின் உற்பத்தி மையமாக இருக்கும் இந்த பாகிஸ்தான் ஒருபோதும் திருந்தவில்லை. போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட எல்லையில் ட்ரோன்களை அனுப்பி தாக்க முயற்சிக்கிறது. அதுவும் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பெரிய காமெடி ஒன்றை செய்துள்ளார். நடிகர் வடிவேலு படம் ஒன்றும்,‛‛டேய் கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா'' என்று சொல்வார். அதனை சற்று மாற்றி ‛‛பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா'' என்று கூறினால் அது நிச்சயம் ஷாகித் அப்ரிதிக்கு பொருந்தும். ஏனென்றால் அவர் செய்த செயல் என்பது இயல்புக்கு மாறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் தற்பெருமை பேசுவது போல் தான் உள்ளது.
அதாவது ஷாகித் அப்ரிடி தலைமையில் கராச்சி நகரில் பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் வெற்றி பேரணி. வெற்றி பேரணி நடத்தும் அளவுக்கு பாகிஸ்தான் என்ன சாதித்தது என்று இப்போது உங்களுக்கு கேள்வி வரலாம். அது வேற ஒன்றுமில்லை. இந்தியாவுக்கு எதிரான போரில் தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாம். இதை கேட்டதுமே உங்களுக்கு சிரிப்பு வருகிறது அல்லவா? இதை வைத்து தான் ஷாகித் அப்ரிடி பாகிஸ்தானில் வெற்றி பேரணி நடத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி வாய்க்கொழுப்பாகவும் பேசியுள்ளார். ஷாகித் அப்ரிடி கூறும்போது, ‛‛யார் வலிமையானவர்கள் என்று நம் ராணுவம் காட்டி உள்ளது. அவர்கள் (இந்தியா) நம்மை குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் நம் திறமைகள், பயன்படுத்தும் தொழில்நுட்பம் பற்றி அவர்களுக்கு தெரியாது. ஒரு தீவிர போரில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். அப்போது வலிமையானவர்கள் யார் என்பதை உலகம் அறியும்.
நீங்கள் (பிரதமர் மோடி) பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் அணியை அனுப்பி வைக்கமாட்டீர்கள். அங்கு பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பு என்பது பரப்பப்பட்டு வருகிறது. இது என்னவகையான மனநிலை? இங்கு அப்பாவிகள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். எங்கே பாகிஸ்தான் ரணுவம் இந்திய மக்களை குறிவைத்து தாக்கியது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்?'' என்று கூறியுள்ளார். இந்நிலையில் தான் ஷாகித் அப்ரிடி வெற்றி பேரணி, அவர் கூறிய கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதனை பார்க்கும் நம் நாட்டினர் ஷாகித் அப்ரிடியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications