கராச்சியில் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்திய 3 பேர்: அச்சத்தில் இந்துக்கள்
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கோவில் ஒன்றுக்குள் புகுந்த 3 பேர் சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் 60 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி சல்வார் கமீஸ் அணிந்து தாடி வைத்த 3 பேர் துப்பாக்கிகளுடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர்.

கோவிலுக்குள் இருந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வெளியேற்றிவிட்டு சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்தாலும் தற்போது தான் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்தபோது கோவிலுக்குள் மஹாராஜ் ஹிரா லால் என்பவரும் அவரது குடும்பத்தாரும், கோவில் பாதுகாவலர்களும் தான் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஹிரா லால் கூறுகையில்,
சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட பிறகு பூஜைக்காக மக்கள் கோவிலுக்கு வர அஞ்சுகிறார்கள். சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர்களை நாங்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. இந்த சம்பவத்தால் வருத்தம் அடைந்துள்ளோம். இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த கோவிலை கட்டியவர் எனது தாத்தா. இந்த கோவிலில் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications