பிரான்சின் பாரீஸ் நகரத்தில் நடக்கும் ஏர் ஷோவில் இஸ்ரேல் நிறுவனங்களுக்கு தடை! இது எப்படி இருக்கு?
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை, 'ஏர் ஷோ' நடைபெறுகிறது. இந்நிலையில், இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆயுத நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல், ஆக்கிரமிப்பு ஆயுதங்களை காட்சிப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI), ரஃபேல் (இஸ்ரேல் தயாரிப்பு) மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட ஐந்து இஸ்ரேலிய நிறுவனங்களின் கூடாரங்களைச் சுற்றி பெரிய கருப்பு திரைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து அல் ஜசீரா செய்தியாளர் நடாஷா பட்லர் கூறுகையில்,
"காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்காட்சியின் விதிமுறைகளின் கீழ் வரவில்லை என்று தீர்மானித்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த முடிவை எடுத்தனர். அதிநவீன டிரோன் போன்ற பயங்கரமான ஆயுதங்களை இஸ்ரேல் காசாவில் பயன்படுத்தியது. இந்த ஆயுதங்களை இந்நிறுவனங்களில் சில தயாரித்திருந்தன. எனவேதான் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ரஃபேல் (இஸ்ரேல் தயாரிப்பு) நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "என்னுடய அரங்கு மூடப்பட்டிருக்கிறது. அரங்கை சுற்றி கருப்பு நிறத்தில் திரைகள் கொண்டு மூடப்பட்டதால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்க்ள எந்தவித முன்னறிவிப்பையும் கொடுக்கவில்லை. நான் அவர்கள் மீது வெளிப்படையாகவே கோபமாக இருக்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறது. இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனங்களுக்கு எதிரான பிரிவினை இது. இந்த ஒருதலைபட்சமான முடிவு வணிக காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் இந்த நடவடிக்கையால், இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications