பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பலரை சிறைபிடித்த நபரும் சுட்டுக் கொலை!
பாரீஸ்: கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் இன்று இரவு சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி ஆகிய சகோதரர்கள் வடகிழக்கு பாரீஸில் உள்ள தம்மார்டின் டி கோயல் நகரில் உள்ள தொழிற்சாலைக்குள் புகுந்தனர். அவர்கள் ஒருவரை பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
அவர்கள் இருக்கும் தொழிற்சாலையை போலீசாரும், ராணுவத்தினரும் சுற்றி வளைத்து இன்று இரவு நடத்திய தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.
அதேபோல, கிழக்கு பாரீஸில் உள்ள போர்ட் டி வின்சென்ஸ் பகுதியில் இருக்கும் கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் 5 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால் பரபரப்பு கூடியது.

சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்தவர் அமேதி கவ்லிபாலி (32) என்றும், பாரீஸின் மலகாப் பகுதியில் பெண் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றவர் அவர் தான் என்றும் கூறப்பட்டது.
இந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கவ்லிபாலி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வசம் இருந்த பிணைக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீட்பு பணியின்போது 2 போலீசார் காயம் அடைந்தனர்.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக பிரான்ஸை உலுக்கி வந்த தீவிரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications