For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரீஸ் தாக்குதலுக்காக ஈபிள் டவரும் அஞ்சலி செலுத்துகிறது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த தீவிரவாத வெறியாட்டத்தை தொடர்ந்து, அந்த நாட்டிலுள்ள புகழ் பெற்ற ஈபிள் டவரின் விளக்குகள் மங்கல் ஒளியில் ஒளிரவிடப்பட்டன.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை, பாரீசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பிரான்சிலுள்ள புகழ்பெற்ற 300 மீட்டர் உயர ஈபிள் டவரில் உள்ள விளக்குகள் மங்கலாக்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும்போது ஈபிள் டவரே சோகத்தில் மூழ்கி நிற்பதை போன்ற தோற்றம் உருவாகிறது.

வழக்கமாக நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண விளக்குகளால் ஈபிள் டவர் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அது தற்போது டிம் செய்யப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காணப்படுகிறது.

English summary
Eiffel Tower will remain dimmed and the High Roller at the Linq will continue to be lit in blue, white and red, like the French flag, in solidarity all night, a Caesar's Entertainment Corp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X