Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வெஜிடேரியன்' சாப்பாடு கேட்டதற்கு 'ப்ரூட்டேரியன்' தந்த கொலம்பியா விமான நிறுவனம்!

கொலம்பியாவின் ஏவியாங்கா ஏர்லைன்ஸ் பயணி ஒருவருக்கு வெஜிடேரியன் சாப்பாடு கேட்டதற்கு பழங்களை அந்த நிறுவனம் தந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொலம்பியா : விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட வெஜிடேரியன் உணவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நன்கு அறிந்த விஷயம், பிளைட்டில் வழங்கும் உணவு போதுமானதாவோ அல்லது ருசியானதாகவோ இருக்காது என்று. கொலம்பியாவின் ஏவியங்கா விமானத்தில் பயணித்த ஒரு பயணியும் தனக்கு வழங்கப்பட்ட உணவை பார்த்து அப்படித் தான் வியந்துள்ளார்.

விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஸ்டீவ். அவரின் டுவீட்டிற்கு பலர் பதிலுக்கு தங்களுக்கு விமானத்தில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

ஆப்பிள், பேரிக்காய் பார்சல்

வெஜிடேரியன், அதாவது சைவ சாப்பாடு கேட்ட ஸ்டீவ் ஹோஹர்டிக்கு சாண்ட்விச்சோ, சாலடோ வழங்கப்படவில்லை. மாறாக இரண்டு ஆப்பிள் மற்றும் ஒரு பேரிக்காயை பிளாஸ்டிக் கவரில் சுற்றி அதற்கு கத்தியும், ஃபோர்க்கும் அருகில் வைத்துத் தந்துள்ளனர்.

உங்களுக்காவது பரவாயில்லை

உங்களுக்காவது பரவாயில்லை பாஸ் நான் பிளைட்ல வெஜிடேரியன் சாப்பாடு கேட்டதற்கு எனக்கு இது தான் கொடுத்தார்கள் என்று ஒரு வலைபதிவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிளாஸ்டிக்கால் சுற்றி அழகாக தந்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படுங்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார் இவர்.

ஆரஞ்சும், கிவியும் தான்

லண்டனில் இருந்து கனடாவிற்கு ஒரு முறை பயணம் மேற்கொண்ட போது தனக்கு ஆரஞ்சு மற்றும் கிவி பழங்கள் மட்டுமே தரப்பட்டதாக பகிர்ந்துள்ளார் இவர். அந்த பயணத்தின் போது நான் மிகவும் பசியால் வாடினேன் என்றும் டுவீட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

எப்படி தட்டில் கொட்டி வைத்துள்ளார்கள்

தாய் ஏர்வேஸின் வெஜிடேரியன் சாப்பாடு இது தான். இதில் நீங்கள் நன்றாகப் பாருங்கள் முந்திரி, பாதாம் உள்ளிட்டவை பழங்களுடன் சேர்த்து எப்படி தட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று டுவீட்டியுள்ளார் இவர்.

உண்மை இது தான்

அட என்னப்பா இதுக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறீர்கள் என்கிற ரீதியில் பதில் டுவீட்டியுள்ளார் இவர். ஏனெனில் இது வெஜிடேரியன் இல்லை ப்ரூட்டேரியன் என்று ஜாலியாக பதிலளித்துள்ளார் இந்த வலைபதிவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+