திடீரென தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்.. கவிழ்ந்த 10 பெட்டிகள்.. 25 பேர் பலி.. பாகிஸ்தானில் சோகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 80 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது கராச்சி. பல்வேறு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதனால், கராச்சியில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் எப்போதும் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாகிஸ்தானின் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்றாகவே இந்த ரயில் நிலையம் உள்ளது.

இந்த நிலையில், கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில், ஷஹசாத்பூர் மற்றும் நவப்ஷாஸ் இடையே உள்ள சஹரா ரயில் நிலையம் அருகே வந்த திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென்று கவிழ்ந்ததில் பயணிகள் அலறினர். தடம் புரண வேகத்தில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு உருக்குலைந்தன.
இந்த கோர விபத்தில் இதுவரை 25 பேர் பலியானதாகவும் சுமார் 80 பேர் படுகாயம் அடைந்ததகாவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் பலர் படுகாயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டு அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்படும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே துறை அமைச்சர் காவ்ஜா சத் ரஃபீக், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் மெக்கானிக்கல் கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் நேற்று தான் அல்லமா இக்பால் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் சேவை மட்டும் பல மணி நேரம் பாதிக்கப்பட்டு இருந்தது. ரயில் தடம் புரண்ட போதும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை என பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்தனர். ஆனால், அதற்கு அடுத்த நாளே மற்றொரு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications