இங்கிலாந்தில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பட்டேல் சமூகத்தார்
லண்டன்: பிரதமர் நரேந்திர மோடி லண்டன் வருகையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இங்கிலாந்தில் உள்ள பட்டேல் சமூகத்தார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் ஹர்திக் பட்டேல் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லண்டன் வருகையில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இங்கிலாந்தில் வசிக்கும் பட்டேல் சமூகத்தார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இது குறித்து வருண் பட்டேல் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி நாங்கள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குஜராத்தில் தான் எங்களின் உரிமைக்காக போராட விடாமல் தடுக்கிறார்கள் இங்காவது அனுமதி அளியுங்கள் என்று கேட்டுள்ளோம்.
பேரணிகள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு குஜராத் அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் பட்டேல் சமூகத்தார் குஜராத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தவும் அரசு அனுமதிப்பது இல்லை என்றார்.
மோடி அடுத்த வாரம் இங்கிலாந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications