நேபாளத்தை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. 3 நாட்களில் மூன்று முறை அதிர்ந்த பூமி! மக்கள் பீதி
காத்மாண்டு: நேபாளத்தில் 3 நாட்களாக 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இமையமலையையொட்டியுள்ள நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 7.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5.18 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 3ம் தேதி இதேபோல ரிக்டர் அளவு 5.3 என நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

ரிக்டர் அளவில் 1 அலகு என்பது அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் 2க்கும் குறைவாக பதிவாகும் நில அதிர்வுகளை நம்மால் உணர முடியாது. பொதுவாக 6க்கும் அதிகமான ரிக்டர் அளவில் பதவாகும் நில நடுக்கங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தால் சுமார் 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications