கென்யாவில் தன்னை இயேசு என்ற இளைஞர்.. "சிலுவையில் ஏற்றுங்கள்".. வளைத்த மக்கள்! போலீசுக்கு போன அவதாரம்
மக்களிடம் மத போதனை செய்யவும் சென்றுள்ளார். தொடக்கத்தில் இவரை சிலர் நம்பி உள்ளனர்.
நைரோபி: கென்யாவில் தன்னை இயேசுவின் அவதாரம் என்று இளைஞர் ஒருவர் கூறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பலர் தங்களை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டது உண்டு. பல மாதங்களில் நாங்கள்தான் கடவுளின் தூதுவர் என்று சொல்லிக்கொண்டு பலர் வந்தது உண்டு.
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று பல மாதங்களில் இப்படி தங்களை பலர் அவதாரம் என்று சொல்லிக்கொண்டது உண்டு. இதனால் கடுமையான பின்விளைவுகளையும் அவர்கள் சந்தித்து உள்ளனர்.

நைரோபி
இந்த நிலையில்தான் கென்யாவில் இளைஞர் ஒருவர் தன்னை இயேசுவின் அவதாரம் என்று கூறி உள்ளார். இயேசு வா டோங்கரேன் என்ற இளைஞர் தான்தான் இயேசு என்று கூறி உள்ளார். இவரின் பெயர் வா டோங்கரேன். தன்னை இயேசுவின் அவதாரம் என்று கூறிய பின், இயேசு வா டோங்கரேன் என்று இவர் பெயரை மாற்றிக்கொண்டனர். நான் இயேசுவின் அவதாரமாக இந்த பூமிக்கு வந்தேன். மக்களை நல்வழிப்படுத்த இந்த பூமிக்கு வந்தேன். இங்கே மக்களின் பிரச்சனைகளை போக்க வந்து இருக்கிறேன். நோய்களை போக்க வந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

போதனை
அதோடு மக்களிடம் மத போதனை செய்யவும் சென்றுள்ளார். தொடக்கத்தில் இவரை சிலரை நம்பி உள்ளனர். இவர் பேசிய தத்துவங்கள் நன்றாக இருந்த காரணத்தால் சிலர் அவரை பின்பற்ற தொடங்கி உள்ளனர். இதையடுத்து மக்களிடம் அவர் பணம் கேட்க தொடங்கி உள்ளார். வறுமையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், அதனால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி பணம் கேட்டுள்ளார். இவரை நம்பி சிலர் அவருக்கு பணம் கொடுக்கவும் தொடங்கி உள்ளனர்.

மக்கள் கோபம்
ஆனால் இவர் இயேசுவின் அவதாரம் கிடையாது. இவர் பொய் சொல்கிறார் என்று அந்த ஊர் மக்கள் சிலர் அவரிடம் சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில்தான் அவரை சிலுவையில் அறைய மக்கள் முடிவு செய்துள்ளனர். நீங்கள் உண்மையில் கடவுள் என்றால் உங்களை சிலுவையில் அறைகிறோம். நீங்கள் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்து வாருங்கள். நீங்கள் உண்மையில் கடவுளின் அவதாரம் என்றால் உயிர்த்தெழுந்து வாருங்கள் என்று மக்கள் அவருக்கு செக் வைத்துள்ளனர். ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறைய கூடாது. அப்படி செய்தால் அது உலகிற்குத்தான் பிரச்சனை. மக்களுக்குத்தான் பிரச்சனை, மக்களை காக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று வாதம் வைத்து உள்ளனர்.

வாதம்
ஆனால் மக்கள் இவரை சிலுவையில் ஏற்றுவதில் உறுதியாக இருந்துள்ளனர். அவரின் வீட்டிற்கு சென்று உங்களை சிலுவையில் அறைய வேண்டும் என்றும் கூறி உள்ளனர். ஆனால் இவரோ வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகி போலீசில் தஞ்சம் அடைந்து உள்ளார். என்னை காப்பாற்றுங்கள். மக்கள் என்னை கொலை செய்ய பார்க்கிறார்கள். சிலுவையில் அறைந்து கொலை செய்ய பார்க்கிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று போலீசில் கோரிக்கை வைத்துள்ளார். அவதாரம் என்று தன்னை கூறிவிட்டு கடைசியில் இவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications