ரூ.110ஐ நெருங்கும் பெட்ரோல்! ரூ.100ஐ நெருங்கும் டீசல்! 14 நாட்களில் 12வது முறையாக உயர்த்தப்பட்ட விலை
இஸ்லாமாபாத்: நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

தேர்தல் காலம்
கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையும் நாடு முழுக்க குறைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை இருந்தது.

இரண்டு வாரமாக உயர்வு
திடீரென கடந்த 14 நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.அதன்பின் 2 நாட்கள் தவிர மற்ற 12 நாட்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 14 நாட்களில் 12வது தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் 109. 34 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை நிலை
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 99.42 ரூபாயாக விற்பனையாகிறது. மொத்தம் இதுவரை பெட்ரோல் விலை 7.91 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 7.99 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 110ஐயும், டீசல் விலை ரூபாய் 100ஐயும் நெருங்கி உள்ளது.

சர்வதேச நிலை
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலையை வைத்தே இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications