அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை: மக்கள் போராட்டம்
அரிசோனா: அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த மாத்திரை டப்பாவை துப்பாக்கி என்று நினைத்த வெள்ளைக்கார போலீஸ்காரர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டார்.
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள பெர்குஷனில் டாரன் வில்சன் என்ற வெள்ளைக்கார போலீஸ்காரர் ஆயுதம் இன்றி இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த பிரவுன் என்பவரை சுட்டுக் கொன்றார். இதனால் பெர்குஷனில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் வெள்ளைக்கார போலீஸ்காரர் ஒருவர் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

போலீசார் பீனிக்ஸ் நகரில் திருட்டு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த காரில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை நோக்கி சென்று உள்ளிருந்தவர்களை வெளியே வருமாறு கூறினார். காரில் இருந்த கருப்பினத்தவரான ருமைன் பிரிஸ்பன் வெளியே வந்தார். அப்போது அவர் காரில் இருந்து எதையோ எடுத்து தனது பாக்கெட்டில் போட்டார். அவர் பாக்கெட்டில் வைத்தது துப்பாக்கி என போலீஸ்காரர் நினைத்தார்.
இந்நிலையில் பிரிஸ்பன் ஓட அவரை போலீஸ்காரர் துரத்திப் பிடித்து கட்டி உருண்டனர். அப்போது போலீஸ்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பிரிஸ்பனை இரண்டு முறை சுட்டார். இதில் பிரிஸ்பன் பலியானார். அதன் பிறகு அவரது உடலை பரிசோதித்தபோது தான் அவரது பாக்கெட்டில் இருந்தது மாத்திரை டப்பா என்பது தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரிஸ்பன் கருப்பினத்தவர் என்பதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications