பயணிகளை காக்க முயன்று தோற்ற ஜெர்மன்விங்ஸ் 'ஹீரோ' இவர் தான்!
டுசல்டார்ப்: விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் கேப்டன் பேட்ரிக் சோந்தெய்மரின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டார்ப் நகருக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 150 பேர் பலியாகினர்.
விபத்தில் பலியானவர்களுக்கு ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கேப்டன்
அஞ்சலி நிகழ்ச்சியில் விமான சிப்பந்திகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது தான் விமானத்தின் கேப்டன் பேட்ரிக் சோந்தெய்மரின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

விமானி அறை
கழிவறைக்கு செல்வதற்காக பேட்ரிக் விமானி அறையில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் விமானி அறைக் கதவை பூட்டிக் கொண்ட லுபிட்ஸ் விமானத்தை தரையை நோக்கி செலுத்தி மலை மீது மோதினார்.

பேட்ரிக்
லுபிட்ஸ் விமானி அறைக் கதவை பூட்டிய பிறகு அதை திறக்கக் கோரி பேட்ரிக் பலமுறை கதவை தட்டினார், இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டார், ஏன் கோடாரியால் கூட கதவை உடைக்க முயன்று தோற்றார்.

ஹீரோ
பேட்ரிக்கின் தாய் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது மகன் ஒரு ஹீரோ என்று தெரிவித்தார். எங்கள் வாழ்வில் இருந்த ஒளி மறைந்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகள்
6 வயது மகள், 3 வயது மகனின் தந்தையான பேட்ரிக் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட அண்மையில் தான் நெந்தூரம் செல்லும் விமானங்களில் இருந்து சிறுது தூரம் செல்லும் விமானங்களுக்கு மாறியுள்ளார்.

இடியட்
பேட்ரிக்கின் பாட்டி மரியான் சோந்தெய்மர் கூறுகையில், என் பேரன் இறந்துவிட்டான். ஒரு இடியட் விமானத்தை விபத்துக்குள்ளாக்கி பலரை கொன்றுவிட்டான் என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications