Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானம் நிறுத்தப்படும் நேரத்தில் சென்னை சிறுவர்களுடன் செக்ஸ்: பிரிட்டீஷ் பைலட் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: செல்லும் இடங்களில் எல்லாம் சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் பைலட் பார்ட்லே பிரேரே, சென்னையிலும் தனது கைவரிசையை காண்பித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பைலட்டாக வேலை பார்த்தவர் ஐம்பது வயதான பார்ட்லே பிரேரே. விமானம் எந்த நகரங்களில் எல்லாம் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறதோ அந்த நகரங்களில் உள்ள சிறுவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பார்ட்லே பிரேரே வழக்கமாக இருந்துள்ளது.

பைலட் கைது

பைலட் கைது

ஐரோப்பாவிலும் இரு சிறுவர்கள் இவரால் ஓரினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் பார்ட்லே பிரேரே கைது செய்யப்பட்டார். அவரின் செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின்போதும் போலீசார் நடத்திய விசாரணையின்போதும், பார்ட்லே பிரேரேயிடமிருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன.

சென்னையில் காம களியாட்டம்

சென்னையில் காம களியாட்டம்

குறிப்பாக, சென்னையில் பார்ட்லே பிரேரே நடத்தியுள்ள காம களியாட்டங்கள், இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விசாரணையில் பார்ட்லே பிரேரே கூறியுள்ளதாவது: சென்னையில் ஓரினச் சேர்க்கைக்காக 16 வயது சிறுவர்கள் சிலருடன் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன். ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி அந்த சிறுவர்களிடம் உறவு வைத்துக்கொள்வது வழக்கம். ஹோட்டலில் உண்மையான பெயரை அளிப்பது கிடையாது.

'அதற்கு' பரிசு ஐ-போன்

'அதற்கு' பரிசு ஐ-போன்

உறவுக்காக யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. உறவுக்கு சம்மதிப்போருக்கு பணம் அல்லது விலை உயர்ந்த பரிசு பொருட்களை வழங்குவேன். ஐ-போன்களை கூட பரிசாக வழங்கியுள்ளேன். இவ்வாறு பார்ட்லே பிரேரே தெரிவித்துள்ளார்.

நிர்வாண டிவிடிக்கள்

நிர்வாண டிவிடிக்கள்

பார்ட்லே பிரேரே வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சிறுவர்களின் நிர்வாண புகைப்படம், வீடியோக்கள் அடங்கிய டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது செல்போனிலும் சிறுவர்களின் நிர்வாண படங்கள் உள்ளன.

ஒன்றாக குளிக்க வேண்டும்..

ஒன்றாக குளிக்க வேண்டும்..

செல்போன் மூலம் சில சென்னை சிறுவர்களுக்கு பார்ட்லே பிரேரே அனுப்பிய எஸ்.எம்.எஸ்சை போலீசார் படித்து பார்த்தனர். அதில் ஒரு எஸ்.எம்.எஸ்சில், உன்னை கட்டி பிடிக்க வேண்டும், ஒன்றாக குளிக்க வேண்டும், கட்டிலில் இணைய வேண்டும் என்று ஏக்கமாக உள்ளது என்றும், ஆடையில்லாத உனது போட்டோவை எனக்கு அனுப்பு என்றும் பல்வேறு வகையான எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளார். அதற்கு சில சிறுவர்கள் போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான சேவை வழங்கும் நகரங்களில் சென்னையும் முக்கியமானது என்பதால் இவரால் அடிக்கடி சென்னை வந்து இந்த வேலையை பார்க்க முடிந்துள்ளது.

ஒரு நாட்டையும் விடுவதில்லை

ஒரு நாட்டையும் விடுவதில்லை

மேலும் இந்தியாவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு விமானத்தை இயக்கி சென்றபோது, விமான நிலையத்தில் இறங்கியதும், பார்ட்லே பிரேரே செய்த முதல் வேலை என்ன தெரியுமா? தாய்லாந்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள சிறுவர்களை எங்கு பிடிப்பது? என்று கூகுளில் தேடியதுதான். அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார் இதை கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ் கொடுமை வழக்கின்கீழ் கைது செய்யப்பட்ட பார்ட்லே பிரேரே மீது போர்னேமவுத் கிரவுன் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+