அதி நவீன ஆயுதங்களுடன் திபெத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சீன ராணுவம்?
அதி நவீன ஆயுதங்களுடன் திபெத்தில் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற புகைப்படத்தை அந்நாட்டு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
பெய்ஜீங்: அதி நவீன ஆயுதங்களுடன் திபெத்தில் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது போன்றும் போருக்கும் தயார் என்று கூறுவது போன்றும் உள்ள புகைப்படத்தை அந்நாட்டு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா - சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் சீன ராணுவத்தினர் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர்.
இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்திய- சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அந்த இடத்தை இந்தியா சொந்தம் கொண்டாடாத போதிலும், பூடானுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறது.

எல்லையில் பதற்றம்
இதனால் எல்லையில் இரு நாடுகளும் தங்கள் வீரர்களை நிலைநிறுத்தியுள்ளன. இந்திய படைகளை திரும்ப பெறவேண்டும் , இல்லையெனில் விரட்டி அடிக்கப்படுவீர் என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும் 1962-ஆம் ஆண்டு போரின் போது ஏற்பட்ட இழப்பை விட தற்போது கூடுதலாக ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு தங்கள் நாட்டு ராணுவம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் பயிற்சி
இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 5,100 மீட்டர் உயரத்தில் உள்ள திபெத் பீடபூமியில் முதல் முறையாக சீன ராணுவம் அதி நவீன 96பி ரக டாங்கிகளைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

எப்போது எடுக்கப்பட்டது?
புகைப்படத்தை பார்க்கும்போது போர் களத்தில் எப்படி அணுகுவது, துப்பாக்கிச் சுடும் பயிற்சி, போர் நடவடிக்கைக்கான கட்டளைகள் பிறப்பிப்பு உள்ளிட்டவை ஒத்திகைக்காக நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகள் கொடுக்கும் கட்டளைகளை அந்நாட்டு வீரர்கள் உன்னிப்புடன் கவனிப்பது போன்றும் தெரிகிறது. எனினும் அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

என்ன சொல்ல வருகிறார்கள்?
முதல்முறையாக இதுபோன்று பயிற்சி நடத்தப்பட்டுள்ளதால் சீன ராணுவம் போருக்கு தயாராக உள்ளதையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் அதி நவீன டாங்கிகள் உள்ளதையும் இந்தியாவுக்கு பூச்சாண்டி காட்டுவது போல் உள்ளது. இதனால் இந்திய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று சீன ராணுவம் இந்தியாவுக்கு உணர்த்துவது போன்றுள்ளது.

96 பி சீனாவின் தூண்
சீன நாட்டு ராணுவத்தின் தூண் என்று 96 பி டாங்கிகள் விவரிக்கப்படுகிறது. சீன ராணுவத்தின் முதுகெலும்பாக 96 பி டாங்கிகள் உருவெடுக்கும் என்று சீன தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications