பறக்கும் போதே தீ பிடித்து எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. வெளியான வைரல் வீடியோ
தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்துள்ளது.
Recommended Video

ஜோஹன்ஸ்பர்க்: தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்துள்ளது. இதன் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
கடந்த வாரம் அந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்டு உள்ளது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீ பிடித்து இருக்கிறது. இதனால் 2 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.

தீ பிடித்தது
இந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் பறப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின் இறக்கை தீ பிடித்துள்ளது.

வீடியோ
இந்த தீ வேகமாக பரவியும் இருக்கிறது. இதை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இதில் மொபைல் கேமராவில் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. தீ பிடிக்கும் காட்சி தத்ரூபமாக பதிவாகி உள்ளது.

விமானத்தை இறக்கினார்கள்
இதனால் உள்ளே இருந்த பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி இருக்கிறார்கள். வெற்றிகரமாக மீண்டும் விமானம் இறக்கப்பட்டது. ஆனாலும் உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

பாதிப்பு என்ன
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்ற பணியாளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக விமான நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications