சவுதி சிறையில் வாடும் அப்பாவி தமிழ் பெண்ணை மீட்க உதவி செய்யுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

ரியாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கூட்டிச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்ட உமா சித்ரா என்ற பெண் உதவி கோரி கதறுகின்றார்.

புதுவையைச் சேர்ந்த உமா சித்ரா என்ற பி.காம் பட்டதாரி பெண்ணை 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹசாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் உதவியாளராக வேலை என்று அழைத்து சென்று வீட்டுவேலை செய்யச் சொல்லியுள்ளார்கள். அங்கு அவரை ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலை பார்க்க வைத்து சரியான சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார்கள்.

இது வரை இக்காமாவும் எடுத்துக் கொடுக்கவில்லை, சம்பளமும் ஒரு ரியால் கூட கொடுக்கவில்லை. இந்த விபரங்கள் அறிந்து அவரின் உறவினர் சிலர் அந்த வீட்டில் இருந்து ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பித்து கொண்டுவந்து இந்தியத் தூதரகத்தில் சேர்த்துள்ளார்கள்.

பின்பு, இந்தியத் தூதரகம் அவர்களை தாயகம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது சித்ரா வீட்டை விட்டு தப்பி வந்ததுமே வீட்டில் உள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை உடைத்து தப்பித்துப் போய்விட்டாள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததின் பேரில் வேறுவழியின்றி சித்ராவை அல்ஹசா காவல் நிலையத்திற்கே தூதரகம் திருப்ப அனுப்பி வைக்க வேண்டிய நிலை வந்தது.

மிகவும் பரிதாபகாரமான நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணின் நிலையறிந்து தமாமில் வசிக்கும் ஒரு பெண் சமூக ஆர்வலர் அவர் கணவருடன் சென்று கபீலிடம் பேசிப்பார்த்ததில் கொடுத்த வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்றால் 26 ஆயிரம் ரியால் வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.

இல்லை எனில் நீதிமன்றம் சென்று ஜோடிக்கப்பட்ட குற்றம் நிரூபனமானால் பல ஆண்டுகள் சிறையில் வாட வேண்டிவரும். எனவே, இறுதியாக 21 ஆயிரம் ரியால் தந்தால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு எக்ஸிட் அடித்து அனுப்புகிறேன் இல்லையேல் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடமாட்டேன் என்று பேசியுள்ளார்.

இறுதியில் விமான நிலையத்தில் ஏற்றிவிட்டதும் தான் பணம் தருவேன் என்ற பேச்சுவார்த்தையின்படி சம்மதித்துள்ளாராம்.

மேலும், இந்தியத் தூதரகத்தில் உயர் நிலை அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக சமூக நலன் கொண்ட சிலர் பேசிப் பார்த்ததில், ஒருவர் தங்கியிருக்கும் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு வந்துள்ளது உண்மையானதால் சட்டச் சிக்கல்கள் உள்ளது, எனவே சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் முடிப்பது தான் நல்லது என்று கூறுகின்றார்களாம்.

இந்தச் சூழ்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில சமூக அமைப்புகள் அவருக்கு சட்ட ரீதியாக உதவ முன்வந்துள்ளது. ரியாத், ஜித்தா, தமாம், அப்ஹா தமிழ் அமைப்புகளும் உதவி செய்ய முன்வந்துள்ளன.

தமிழர்கள் சார்பில் நம்மாலான சட்ட மற்றும் தேவையான உதவிகளைச் செய்து அல்ஹசா தர்ஹீல் சிறையில் வாடும் அந்த அபலைப் பெண்ணை சிறையில் இருந்து விடுவித்து தாயகம் அனுப்பி வைக்க சமூக ஆர்வலர்கள் சிலர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், அந்த அபலை பெண்ணுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+