மோடியை அப்படியே ஆரத்தழுவி வரவேற்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத்! கோலாகல வரவேற்பு
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பிப்.14-15 தேதிகளில் கத்தாருக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

குடும்ப உணர்வு என நெகிழ்ந்த மோடி: தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய பிரதமர் மோடி, தங்களது அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி. உங்களை சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும் என் குடும்பத்தினரை சந்திப்பது போல உணருகிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நாம் சந்தித்துள்ளோம். நமது இருதரப்பு உறவில் இத்தகைய சந்திப்பு அரிதானவை என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
7-வது முறையாக எமிரேட்ஸ் பயணம்: முன்னதாக தமது வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியிருந்தாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
எமிரேட்ஸ்- இந்தியா உறவு: கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான நமது ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நமது கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.
#WATCH | Abu Dhabi, UAE: Prime Minister Narendra Modi and President of UAE Sheikh Mohamed bin Zayed Al Nahyan, share a hug. PM Modi was also accorded Guard of Honour upon his arrival. pic.twitter.com/MSLhuTEv8d
— ANI (@ANI) February 13, 2024
இருதரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்து, நமது விரிவான உத்திசார் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவான விவாதங்கள் நடத்துவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024-ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்நாட்டின் இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
துபாயில் உலக அரசு உச்சி மாநாடு: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபரும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களின் கூட்டத்தில் நான் உரையாற்ற உள்ளேன். உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உடனான எனது விவாதங்கள், துபாயுடனான பன்முக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளேன்.
அபுதாபியில் இந்து ஆலயம் திறப்பு: இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு பிஏபிஎஸ் கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும். அபுதாபியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து இந்திய சமூகத்தினரிடமும் நான் உரையாற்ற உள்ளேன்.
#WATCH | Abu Dhabi: Memorandum of Understanding (MoUs) being exchanged between India and UAE in the presence of UAE President Mohammed bin Zayed Al Nahyan and Prime Minister Narendra Modi pic.twitter.com/RAOO2PxC4i
— ANI (@ANI) February 13, 2024
கத்தார்: கத்தாரில், அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அவரது தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டு வருகிறது. கத்தாரில் உள்ள இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன். இந்தியாவும், கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன. சமீப ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது எரிசக்தி பங்களிப்பை வலுப்படுத்துதல், கலாச்சாரம் மற்றும் கல்வியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது பன்முக உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன. தோஹாவில் 8,00,000-க்கும் மேற்பட்ட வலுவான இந்திய சமூகத்தினர் இருப்பது இருநாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்குச் சான்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
-
புதினின் சீக்ரெட் ஆஃபர் கருப்புத் தங்கம்! உங்க வீட்டு கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்? ஈரானுக்கும் - அமீரகத்துக்கும் என்ன தான் பிரச்சனை! முழு விவரம் -
சவுதிக்கு வார்னிங்! மருந்து மூல பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளிலிருந்து வெளியேறுங்கள் - ஈரான் -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications