ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்களுடன் கலந்துரையாடல்
பெர்லின்: ஜெர்மனியில் நடக்கும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட உலகின் பல நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
Recommended Video
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் 2 நாள் ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. நேற்று, இன்று என இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஜி7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளன.
பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள் ஆண்டு தோறும் உச்சிமாநாடு நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

மோடிக்கு சிறப்பு அழைப்பு
இந்த உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜெர்மனிக்கு சென்றார். நேற்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். மேலும் ஜெர்மனி வாழ் இந்தியர்களும் பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

உச்சிமாநாட்டில் மோடி
ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இவருடன் அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன் நாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கைக்குலுக்கி ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். இதேபோல் பிற நாட்டு தலைவர்களும் வரவேற்கப்பட்டனர்.

உலக தலைவர்களுடன் கலந்துரையாடல்
இதையடுத்து ஜி7 நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் உள்ளிட்டவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். முன்னதாக குழு புகைப்படத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நடந்து வந்தார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தோளை தட்டி அழைத்தார். நரேந்திர மோடி திரும்பி பார்க்கவே கையை நீட்டி ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் ஜோபைடனின் தோளை தட்டி வாழ்த்து தெரிவித்தார்.

குழுவாக இணைந்து செயல்பட...
இந்த மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், உணவு பொருட்களின் பற்றாக்குறை உள்பட நாடு சந்திக்கும் சவால்கள் பற்றி விரிவாக விாதிக்கப்பட்டது. மேலும், இந்த பிரச்சனையை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து ஒரே குழுவாக செயல்பட வேண்டும் என தலைவர்கள் பேசினர். மேலும் இந்தியா-ஜெர்மனி இடையே வணிகம், எரிசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசப்பட்டது. இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருநாடுகள் இடையேயான உறவு குறித்து விவாதித்தார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications