ஐ.நா. மாநாட்டில் பரஸ்பரம் கையசைத்து கொண்ட பிரதமர் மோடி- பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரும் பரபஸ்பரம் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச்சபை கூட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு, அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேலும் அமெரிக்கா அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் எந்த ஒரு சந்திப்பையும் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடி நடத்தவில்லை.
நியூயார்க்கில் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த போதும் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. அமைதிகாப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு அரங்குக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி வந்து தமக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடிக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமருவதற்கு முன்னதாக மோடியைப் பார்த்து கையை அசைத்தார்.
பிரதமர் மோடியும் உட்கார்ந்தபடியே பரஸ்பரம் கையசைத்து புன்னகைத்தார்.
பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டின் போதுதான் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதன் பின்னரும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு தலைவர்களிடையே அமெரிக்காவில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறாது என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications