வாஷிங்டனில் பிரதமர் மோடி..ஒபாமாவுடன் இன்று மதிய விருந்து !
வாஷிங்டன்: ஆப்கன், கத்தார், சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். இதைத்தொடர்ந்து மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மதிய உணவு விருந்து அளித்து கெளரவிக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.

ஜெனீவாவில் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து அதிபர் ஜோகன்சினைடரை சந்தித்து பேசினார். அதன் பின்னர் சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார். விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவை, வெள்ளை மாளிகையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் மோடி இன்று சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பருவநிலை மாற்றம் இரு நாட்டு பாதுகாப்பு, தூதரக ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மதிய உணவு விருந்து அளித்து கெளரவிக்கிறார். பின்னர் நாளை அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் ஆன பின்னர் மோடி அமெரிக்கா செல்வது இது நான்காம் முறை. அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆறாவது முறையாக மோடி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications