பாக்.கிற்கும் துருக்கிக்கும் ஒரே நேரத்தில் செக்.. மோடியின் அசத்தல் திட்டம்.. சவுதி செல்ல 2 காரணம்!
Recommended Video
ரியாத்: பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு எதிராக இந்திய பிரதமர் மோடி சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகி சவுதி அரேபியா சென்றுள்ளார். இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதேபோல் பிரதமர் மோடி சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் சந்திப்பு நடத்த உள்ளார். மேலும் சவுதியில் நடக்கும் வருடாந்திர உயர்மட்ட பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பாகிஸ்தான் சர்ச்சை
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை குறித்தும் பிரதமர் மோடி சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் பேச இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை குறித்து மோடி பேசுவார். ஐநாவில் நடந்த மாநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இம்ரான் கான் முதலில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.

ஏன் சண்டை
பின் இம்ரான் கான் அங்கிருந்து அமெரிக்கா சென்றார். இந்த அமெரிக்க பயணத்தில் இம்ரான் கானுக்காக சவுதி அரசு குடும்பத்திற்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் பேசிய சில விஷயங்களை சவுதி அரசு விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் குறித்து பாகிஸ்தான் பேசியதை சவுதி விரும்பவில்லை.

அட
இந்த நிலையில், சவுதி இளவரசர், இம்ரான் கான் மீது கோபம் கொண்டு, தனது விமானத்தை திரும்ப அழைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் திரும்பும் போது இம்ரான் கான் தனியார் விமானத்தில்தான் சென்றார். சல்மானின் விமானம் பயன்படுத்தப்படவில்லை.

பயன்படுத்த திட்டம்
இந்த வாய்ப்பை தற்போது பயன்படுத்திக் கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீது முகமது பின் சல்மான் கோபமாக இருப்பதால், அவருடன் நெருக்கம் காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். பிரதமர் மோடியின் பயணத்தில் இது முக்கிய விஷயமாக, குறிக்கோளாக இருக்கும். பாகிஸ்தானை ஆசியாவில் தனித்து விட இந்தியா திட்டமிட்டு வருகிறது.

துருக்கி பிரச்சனை
அதேபோல் ஆசியாவில் எத்தனை நாடுகளின் நட்பை பெற முடியுமோ அத்தனை நாடுகளின் நட்பை பெற இந்தியா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் விஷயத்தில் எண்ணெய் வள நாடான துருக்கியை இந்தியா பகைத்துக் கொண்டது. துருக்கி நாட்டின் உறவை கொஞ்சம் கொஞ்சமாக முடித்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதுதான் காரணம்
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐநாவில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் பேசியது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக மிக முக்கிய வாதங்களை வைத்து பேசி இருந்தது. இதுதான் இந்தியா துருக்கி பிரச்சனைக்கு காரணம்.

வரலாறு
அதேபோல் துருக்கி உடன் சவுதி அரேபியாவும் கொஞ்சம் சண்டை போட்டு வருகிறது. முக்கியமாக தி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் காசாக்கி கொல்லப்பட்டதில் இருந்தே துருக்கி சவுதி இடையே சண்டை நிலவி வருகிறது. ஜமால் கொலையில் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்புள்ளது என்று துருக்கிதான் முதல்முறை நேரடியாக குற்றச்சாட்டு வைத்தது.

கடுமையான கோபம் உள்ளது
இதனால் சவுதி முகமது பின் சல்மான் துருக்கி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால், துருக்கியை சமாளிக்க இந்தியா தற்போது சவுதி உடன் நெருக்கமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது இந்தியாவிற்கு கூடுதல் பலத்தை கொடுக்க போகிறது.












Click it and Unblock the Notifications