பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: ஆஸி. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
கான்பெரா: பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருநாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். கான்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பிரதமர் வருவதற்கு 28 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை கூடிய விரைவில் மாறும். ஆஸ்திரேலியா மீது இந்தியாவுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. இந்த நாட்டின் மீதான எங்களது பார்வை எல்லைக்கு உட்பட்டதல்ல.

இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தியா தொடர்ந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது. பயங்கரவாதத்தின் மீது சரியான புரிதலை நாங்கள் கொண்டுள்ளோம். பயங்கரவாதிகள் தற்போது தங்களது எல்லையை விரிவாக்கம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு இணைய வசதி அவர்களுக்கு ஏதுவாகிவிட்டது. வன்முறையை தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து அவர்கள் சாதிக்க நினைக்கின்றனர். பண மோசடி, போதை மருந்து கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை இணையத்தின் வழியாகவே நடத்தப்படுகின்றன.
உலகளாவிய பிரச்சினையாகிவிட்ட இவற்றை நாம் ஒன்றாக எதிர்க்க வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளுக்கு உலகளாவிய தீர்வுக் காணப்பட வேண்டும்.
இந்தியாவுடனான நட்பு நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கின்றது. இந்த எண்ணத்தை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பெற்றுள்ளதாக என்னால் கூற முடியாது. இரு நாடுகளாலும் பல விஷயங்களை இணைந்து சாதிக்க முடியும்.
நமது துறைமுகங்களில் நுழைய நினைக்கும் பயங்கரவாதத்தை, நமது மாநிலங்களாலே தடுத்து நிறுத்த முடியும். பயங்கரவாதத்துக்கு எதிராக சமூகம் ஒன்று கூடி எழுந்தால் அவர்களால் ஊடுருவ முடியாது என்பது நிச்சயம்.
பிராந்தியங்களிலும் மாநிலங்களிலும் ஏற்படும் அரசியல் போட்டி சில பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. ஆனால், உலக அளவில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதே இல்லை. நாடுகள் ஒருங்கிணைவது முக்கியத்துவம் வாய்ந்தது.
கடலோரப் பாதுகாப்பு வசதிகளில் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும். கடலோரத்தில் நாம் ஒன்றாக உழைத்தால், சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு அமையும். அதேபோல சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அவர்களின் கொள்கைகளையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.
அடுத்தக் கட்டமாக விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிப் பயணத்திலும் இணைய மேம்பாட்டிலும் நாம் முன்னோடியாக இருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல சாதனைகளை ஒன்றாகப் பெற வேண்டும். அடுத்ததாக, விரைவில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்.
பேரிடர் சம்பவங்களை இரு நாடுகளும் அவ்வப்போது சந்தித்து வருகின்றன. இதனால் பல வகையிலான இழப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தேர்ந்த தொலைநோக்கு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. நாட்டின் கலாச்சாரம் சரியான பார்வையோடு எடுத்து செல்லப்பட வேண்டும்.
இதில் சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லாமல் செயல்படுவது அவசியமாகும். மேக் இன் இந்தியா என்ற திட்டம் குறித்து விரைவில் ஆஸ்திரேலியாவில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இந்த திட்டத்தின் பெயர் மட்டுமே மேக் இன் இந்தியா. ஆனால் இதற்கான வழிமுறைகள் எந்த இடத்தில் சிறந்து விளங்குகிறதோ, அதனை பின்பற்றுவதில் தவிறில்லை.
இந்திய நகரங்களில் பல மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய கடமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, மக்கள் தொகை ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் தனித்தன்மை உள்ளது. இவை வளர்ச்சிக்கு நீண்ட கால வாய்ப்பு வழங்கும், அத்தகைய கட்டமைப்பை தான் நமது ஜனநாயகம் பெற்றுள்ளது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புவியியல் ரீதியாக ஒரு கண்டத்தில் இணைந்து இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை பின்னர் சில கால மாற்றங்களால் பிரிந்ததாம். இந்த இணைப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் நமது வரலாறு அதனை நிரூபிக்கின்றது.
இனி வரும் காலங்களிலும் நாம் இணைந்தே செயல்படுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய பின்னர், இரு நாட்டு அதிகாரிகள் குழு முன்னிலையில் சமூக பாதுகாப்பு, தண்டனை கைதிகள் பரிமாற்றம், போதைப் பொருட்கள் வியாபார தடுப்பு மற்றும் சுற்றுலா, கலை மேம்பாடு மற்றும் பண்பாடு ஆகியவற்றை தொடர்பான முக்கிய 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் பின்னர் நாடாளுமன்ற உரை மற்றும் இரு நாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தனது 10 நாள் சுற்றுப் பயணத்தில் 4-வது நாளான மெல்பேர்ன் நகருக்கு சென்றடைந்தார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications