கோலாலம்பூரில் பிரதமர் மோடி! இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!!
கோலாலம்பூர்: மலேசிய சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்தியர்கள் பெரும் திரளமாக திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று கோலாலம்பூர் சென்றடைந்த அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி பிரதமர் மோடியை வரவேற்றார்.
PM @narendramodi landed in Malaysia. A series of meets, summits & economic deliberations await. pic.twitter.com/xwPcZqB0ma
— PMO India (@PMOIndia) November 20, 2015 வழி நெடுகிலும் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று இந்திய தேசிய கொடியை அசைத்த வண்ணம் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அதேபோல் வழியெங்கும் பிரமாண்ட பதாகைகள் அமைத்தும் பிரதமர் மோடியை இந்தியர்கள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரஸாக் மற்றும் அந்நாட்டு மூத்த தலைவர்களுடன், இருநாட்டு உறவுகள் மேம்பாடு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த உள்ளார் பிரதமர் மோடி.
அப்போது பல்வேறு ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட உள்ளனர். ஆசியான் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
கோலாலம்பூரில் நாளை மாலை மலேசிய சர்வதேச கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பளிக்கின்றனர். அப்போது மலேசியா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
கோலாலம்பூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையையும் லிட்டில் இந்தியாவில் தோரண வாயிலையும் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் 24-ந் தேதியன்று சிங்கப்பூரிலும் இந்தியர்கள் பிரமாண்ட பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications