'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்
பாங்காக்: 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 'தாய்' மொழியில், திருக்குறளை வெளியிட்டார்.
இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார்.

இதன் ஒரு அம்சமாக பாங்காக்கில் இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு துவங்கிய, 'SawasdeePMModi' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி, நினைவு நாணயம் ஒன்றையும், திருக்குறளின் 'தாய்' மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார்.
Thailand: Prime Minister Narendra Modi releases a commemorative coin marking the 550th birth anniversary of Guru Nanak Dev & also releases a Thai translation of Tamil classic 'Tirukkural', at the #SawasdeePMModi event in Bangkok. pic.twitter.com/EosGzVbkXY
— ANI (@ANI) November 2, 2019
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உரையை ஆரம்பித்தபோது, நமது நாட்டின், தமிழ் உள்ளிட்ட, பல்வேறு மொழிகளிலும் மோடி வணக்கம் என்பதை தெரிவித்தார்.
நான் தாய்லாந்தில் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு அந்நிய தேசத்தில் இருப்பதாக உணரவில்லை. சுற்றுப்புறம், உடை, இங்குள்ள அனைத்தும் என்னை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கின்றன என்றும் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நமது உறவுகள் மிகவும் வலுவடைந்துள்ளன என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்துள்ளீர்களா? இந்தியாவும் தாய்லாந்தும் பகிர்ந்து கொள்ளும் வலுவான பிணைப்புக்கு காரணம் என்ன? வரலாறு நம்மை ஒன்றிணைத்து நமது உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும், தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் சாத் பூஜைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி உரையாற்றினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications