குவாட் மீட்டிங் ரத்து ஆனாலும், ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி.. உறுதி செய்த ஆஸி. பிரதமர்!
மெல்போர்ன் : சிட்னியில் வரும் மே 24ஆம் தேதி நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்றும், அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், அவர் குவாட் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜப்பானில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்கா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார். ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள். அந்த மாநாட்டில் நாங்கள் 4 பேரும் ஒன்றாக ஆலோசிக்க முயற்சிப்போம்." எனத் தெரிவித்தார்.

குவாட் தலைவர்கள் கூட்டத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி சிட்னிக்கு வருவாரா அல்லது அவரது பயணமும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலளித்தார். குவாட் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி மிகவும் வரவேற்கத்தக்க விருந்தினராக வருவார் என்று தெரிவித்தார்.
"பிரதமர் மோடி அடுத்த வாரம் என்னுடன் இருதரப்பு சந்திப்புக்கு வருவார். பிரதமர் மோடி வணிக சந்திப்புகளை நடத்துவார். சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் ஹோம்புஷ் என்ற இடத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார். பிரதமர் மோடி ஆஸ்திரேலிய - இந்திய வணிக உறவு தொடர்பான சந்திப்புகளில் ஈடுபடுவார். அவரை சிட்னிக்கு வரவேற்க நான் ஆவலாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications