இணையத்தில் உலவும் குழந்தைகள் ஆபாசப்படங்கள்: ஆசிரியர், பெற்றோர் உட்பட 348 பேர் கைது
டொராண்டோ: இணையத்தில் குழந்தைகள் ஆபாசப் படத்தை வெளியிட்டதாகக் கூறி, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக 348 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவது குறித்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கனடா நாட்டில் செயல்பட்டுவரும் அசோவ்பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதனடிப்படையில் தற்போது 348 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக டொராண்டோ போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

348 பேர் கைது....
கடந்த மூன்று வருடமாக நடைபெற்ற விசாரணையின் மூலம் குழந்தைகள் ஆபாசபடத்தை இணையத்தில் உலவ விட்ட குற்றத்திற்காக கனடாவில் 108 பேர்,அமெரிக்காவில் 76 பேர்,ஸ்பெயின்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 164 பேர் என்று மொத்தம் 348 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள்....
குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து வந்த 40 பள்ளி ஆசிரியர்கள் ,9 மருத்துவர்கள்,32செவிலியர்கள், 6 சட்ட அமலாக்க அதிகாரிகள்,9 மத போதகர்கள், 3 வளர்ப்பு பெற்றோர்கள் போன்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் அடக்கமாம். இதனை செக்ஸ் குற்றவியல் பிரிவின் தலைவரான இன்ஸ்பெக்டர் சோனா பெவன் டெஸ்ஜார்டின்ஸ் உறுதி படுத்தியுள்ளார்.

30 காவல்துறைப் படை...
இந்த ஆபரேஷனில் ஆஸ்திரேலியா,ஸ்பெயின்,அயர்லாந்து,கிரீஸ்,தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், மெக்சிகோ, நார்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து 30காவல்துறைப் படையினர் பயன் படுத்தப் பட்டுள்ளனர்.

9ஆயிரம் வீடியோக்கள்....
தீவிர தேடுதல் வேட்டையில் 3,50,00 லட்சத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களும், 9,000 வீடியோக்களும் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கலாம்....
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட இணையதள நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் குற்றவாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

நம்பிக்கை....
இதுவரை 386 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்படும் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications