Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்: ஆன்மீக வழிகாட்டி புஷ்ரா பீபீயை மணந்தார்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் 3-ஆவது திருமணம் செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இம்ரான் கானுக்கு 3-ஆவது திருமணம்- வீடியோ

    லாகூர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் தனது ஆன்மீக வழிகாட்டியான புஷ்ரா பீபீயை மணந்தார். அவருக்கு இது மூன்றாவது திருமணமாகும்.

    பாகிஸ்தான் தெரிக் -ஏ- இன்சாஃப் என்ற கட்சியின் தலைவராக உள்ளவர் இம்ரான் கான். இவருக்கு ஏற்கெனவே இரு திருமணங்கள் நடைபெற்ற நிலையில் அவை விவாகரத்து பெற்ற பிறகு தற்போது மூன்றாவதாக ஒருவரை திருமண் செய்து கொண்டுள்ளார்.

    லாகூரில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ள பாக்படான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்ரா மனேகா. அப்பகுதியில்தான் பாபா பரீத் கஞ்ச் சாகர் என்ற கோயில் உள்ளது. கடந்த ஓராண்டாக இந்த கோயிலுக்கு செல்லும் இம்ரான் கான், மனேகாவை சந்தித்து ஆன்மீக ரிதியான அறிவுரைகளை கேட்டதாக கூறப்படுகிறது.

     திருமண ஆசை

    திருமண ஆசை

    அரசியல் ரீதியாக மனேகா முன்கூட்டியே கூறிய சில விஷயங்கள் அப்படியே நடந்துவிட்டதால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் மனேகாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை இம்ரான் கான் அவரிடம் கூறியதாக தெரிகிறது.

     5 குழந்தைகள்

    5 குழந்தைகள்

    இதையடுத்து மனேகாவும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு இம்ரான் கானை திரும்ப செய்ய முடிவு செய்தார். அவருக்கு முதல் கணவர் மூலம் 5 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து லாகூரில் உள்ள மனேகாவின் சகோதரர் வீட்டில் இருவரது திருமணமும் எளிய முறையில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் இம்ரான் கானின் கட்சியினர் கலந்து கொண்டனர்.

     இரு மகன்கள்

    இரு மகன்கள்

    இம்ரான் கானுக்கு ஜெமிமா கோல்ட் ஸ்மித்துடன் கடந்த 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரிட்டன் நாட்டு பணக்காரரான கோல்ட் ஸ்மித்துக்கு இம்ரான் கான் மூலம் இரு மகன்கள் உள்ளனர். இந்த திருமணம் 9 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது.

     10 மாதங்கள் நீடிப்பு

    10 மாதங்கள் நீடிப்பு

    அடுத்தபடியாக டிவி தொகுப்பாளினி ரேஹம் கானை கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார் இம்ரான் கான். இது 10 மாதங்களுக்கு மட்டுமே நிலைத்தது. தற்போது மூன்றாவதாக ஆன்மீக வழிகாட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+