சளித் தொந்தரவு: பிரார்த்தனைக் கூட்டத்தை ரத்து செய்த போப்பாண்டவர்
Subscribe to Oneindia Tamil
வாடிகன்சிட்டி: சளித் தொந்தரவு காரணமாக தனது வெள்ளிக் கிழமைக் காலை பிரார்த்தனைக் கூட்டத்தை ரத்து செய்தார் போப் பிரான்சிஸ்.
தினந்தோறும், வாடிகன் சிட்டி செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று பார்வையாளருக்கு ஆசி வழங்குவது போப்பாண்டவரின் வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் போப் பிரான்சிஸ், சளித்தெல்லையால் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக் கூட்டத்தை ரத்து செய்தார். ஆனால், உடல் நிலை சற்று சீரானதைத் தொடர்ந்து, மாலையில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா புதிய பிஷப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு பிஷப் பெர்னாண்டோ வெர்ஜெஸ் அல்ஜகாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது 76 வயதாகும் போப் பிரான்சிஸிற்கு இளவயதில் கிருமி தொற்று காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications