கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!
வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ரோமன் கத்தோலிக்க தலைநகரமான வாடிகன் நகரில் வழக்கமாக கிறித்துமஸ் தினம் களைகட்டும். நள்ளிரவில் அங்கு கூடும் பல ஆயிரம் பேருக்கு ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஆசி வழங்குவார். ஆனால் கொரோனா அச்சறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வாடிகன் புனித பீட்டர் செயின்ட் சதுக்கத்தில் இந்த ஆண்டு கிறித்துமஸ் பிராத்தனையில் மிகச்சிலரே அனுமதிக்கப்பட்டனர். அங்கு போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினர்.
இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இந்த கொரோனாவை நிரந்தரமாக ஒழிக்க தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த தொற்றினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவைப்படுபவர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போட வேண்டும்.
தடுப்பூசி கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு இந்த கொரோனா நோய்க்கு ஒரு தீர்வைத் தேட வேண்டும். ஏனெனில் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' ஆகும்.
எந்த ஒரு மக்களும் எனது குடும்பம், எனது இனக்குழு அல்லது எனது மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும், சகோதரத்துவமும் இரக்கமும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். இதில் யாரும் விதிவிலக்கல்ல. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, தேவைப்படுபவர்களுக்கு "தாராளமாகவும், ஆதரவாகவும், உதவியாகவும் இருந்து ஊக்குவிக்கும். தொற்று நோயால் ஏழ்மையில் வாடுபவர்கள், வன்முறைக்கு ஆளான பெண்கள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துவின் ஆசி வலு சேர்க்கும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications