புதிய போப் ஆக பதவியேற்றார் 14ஆம் லியோ ராபர்ட் பிரிவோஸ்ட்! உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து!
வாட்டிகன்: வாட்டிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ பதவியேற்றுள்ளார். போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்வால் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் நடந்து வந்தன.

புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் "போப் லியோ 14" (Pope Leo XIV) என்று போப் ஆண்டவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் புதிய போப் இன்று பதவியேற்றுள்ளார்.
வாடிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ பதவியேற்றுள்ளார். போப் 14ம் லியோவுக்கு போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும்
வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பின் போது போரால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்காக போப் 14ஆம் லியோ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
புதிய போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றுள்ளார்.
போப் பதவியேற்பு விழாவையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் சார்பில் புதிய போப் 14 ஆம் லியோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்கும் தருணம் அமைதிக்கான லட்சியம், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் சேவை ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications