பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல்? புல்லட் புரூப் ஷீல்ட் உடன் நின்ற எஸ்பிஜி.. உக்ரைனில் என்ன நடந்தது?
கீவ்: இந்தியா- ரஷ்யா இடையே நெருக்கமான உறவு இருப்பதால், உக்ரைனில் பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும் சிறப்பு கமாண்டோ படையினர் அரண் போல பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றார். போலந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் சென்றார். ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது.

இத்தகைய சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், சர்வதேச அளவில் வல்லமை மிக்க நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. 10 மணி நேரம் ரயிலில் பயணித்து பிரதமர் மோடி, உக்ரைனுக்கு சென்றார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து உரையாடினார்.
அப்போது, இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அமைதியின் பக்கம் நிற்கிறது என்ற வலுவான மெசேஜையும் மோடி முன்வைத்தார். முன்னதாக உக்ரைனில் பிரதமர் மோடியின் பயண திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. பிரதமர் மோடி உக்ரைன் சென்றதும், அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.
உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அவர்களுடன் உற்சாகமாக கை கொடுத்தார். இதனை தொடர்ந்து கீவ் நகரில் உள்ள அமைதி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்பு படை யினர் (எஸ்பிஜி) புல்லட் புரூப் ஷீல்டை தூக்கி பிடித்த படி பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அரண் போல நின்றுள்ளனர்.
தாக்குதல் முயற்சி ஏதேனும் நடைபெற்றால் அதை முறியடிக்கும் விதமாக முன் கூட்டியே எஸ்பிஜி படையினர் உஷார் நிலையில் இருந்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் மிக நெருக்கமான நட்பை கொண்டுள்ளார். இதனால், இந்தியாவுக்கு எதிரான மனநிலை உக்ரைனில் ஒரு தரப்பினர் இடையே நிலவுவதாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். இதையடுத்தே பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் பிரதமர் மோடி இருந்த 7 மணி நேரமும் 60 எஸ்பிஜி கமாண்டோக்கள் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அமைதி பூங்கா என்பது திறந்த வெளியில் அமைந்துள்ளது. இதனால், அமைதி பூங்கா முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஆலோஷ்ஷர்மா தலைமையில் 60-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், நவீனரக துப்பாக்கியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்புடனும், விழிப்புடனும் இருந்துள்ளனர். பிரதமர் மோடி தனது உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு போலந்திற்கு ரயிலில் புறப்பட்ட பிறகே, பாதுகாப்பு படையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications