அதிகாலையிலேயே குலுங்கிய நியூசிலாந்து.. 6.8 ஆக பதிவு.. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்!
வெலிங்டன்: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதலில் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக கூறிய தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் பின்னர் அதனை மறுத்தது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் கூறியது. எனினும் இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறினர். பறவைகள் கத்தியதாகவும் சிலர் தெரிவித்தனர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications