நம்பினால் நம்புங்கள்... மூன்றே நாளில் செவ்வாய்க்கு போய் விட முடியுமாம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை எட்டிப் பார்த்து, பின்னர் தொட்டுப் பார்த்து, இப்போது உள்ளேயே போய் இறங்கி விட்ட நிலையில் அடுத்து அங்கு போய்ச் சேருவதற்கஆன காலத்தைக் குறைக்கும் வழிகளை ஆய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது அதற்கும் ஒரு ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள்.
கடினமான போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் இயங்கக் கூடிய ரோபோட்டிக் விண்கலம் மூலம் பூமியிலி்ருந்து மிகக்குறைந்த பயண நேரத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் ஆராய்ச்சியை அமெரிக்க விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
செவ்வாய்கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஏறக்குறைய பூமியின் தன்மையோடு ஒத்திருப்பதால், அங்கு மனிதர்களைக் குடியேற்றும் கனவும் விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் அங்கு சோதனை முயற்சியாக மனிதர்களைக் குடியேற்றவும் அவர்கள் திட்டமிட்டு, செயல்பட்டு வருகின்றனர்.

பயண நேரம்...
தற்போது விண்வெளி ஓடங்கள் மூலம் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய பயண நேரம் மாதக்கணக்கில் ஆகிறது. ஆனால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பயண நேரத்தைச் சுருக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகத்தில்...
இதற்கு விண்வெளியில் காணப்படும் போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களை பயன்படுத்தி அதிகவேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய போட்டோனிக் ப்ரொபுல்ஷன் (photonic propulsion) என்ற புதியவகை தொழில்நுட்பத்தை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆய்வு...
இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

3 நாட்களில்...
இந்த போட்டோன் கதிர்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்ப்பு ஒளியலைகளை லேசர் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கும் திட்டம் விஞ்ஞானிகளிடத்தில் உள்ளது. அத்தகைய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் விண்வெளி ஓடங்கள் மூலம் பூமியிலிருந்து 3 தினங்களிலேயே செவ்வாய்கிரகத்தைச் சென்றடைந்து விடும் என அவர்கள் நம்புகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications