மண்டேலா நினைவு பிரார்த்தனை: பிரணாப், சோனியா இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் மண்டேலா நினைவு சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர்.
நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த வியாழக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்திய அரசு சார்பில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மண்டேலாவின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் செய்தி விடுத்தனர்.

மண்டேலாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி டிசம்பர் 15-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பிறந்த குனு நகரில் நடக்கிறது. இதில் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் மண்டேலா நினைவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய மந்திரி ஆனந்த்சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் திங்கட்கிழமை இரவு டெல்லியில் இருந்து தென்ஆப்பிரிக்கா செல்கின்றனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்கும் இந்த குழுவுடன் சேர்ந்து தென்ஆப்பிரிக்கா செல்வார் என்று தெரிகிறது.இவர்கள் அனைவரும் நாளை நடைபெறும் மண்டேலாவின் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மத்திய அரசு சார்பில் வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications