வயிற்றில் குழந்தையுடன் ஓடி ஜெயித்த சாதனைப் பெண் அல்சியா!
வாஷிங்டன்: கர்ப்பமாக இருந்த போதிலும் தளராமல் களத்தில் ஓடி 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க வீராங்கனை அல்சியா மோன்டானோ.
பின்னாளில் தன்னுடைய குழந்தைக்கு சொல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை பாடத்தை இதன் மூலம் நடத்திக் காட்டியுள்ளார் அவர்.

இந்த அற்புதமான தருணத்தின் மூலம் தன்னுடைய குழந்தைக்கு தன்னம்பிக்கையின் அற்புதத்தையும் காட்டியுள்ளார்.
உலக சாம்பியன் அல்சியா:
அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 34 வார கர்ப்ப வயிற்றுடன் கலந்து கொண்டார் அல்சியா. 5 முறை உலக சாம்பியனான இவர் தன்னுடைய ஓட்டத்தை 2 நிமிடங்கள் 32.13நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
கொஞ்சம் தாமதம்:
ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டில் மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 1:57:34மணிக்கூறுகளில் கடந்த இவர், இந்தமுறை தன்னுடைய முந்தைய சாதனையில் 35 நிமிடங்கள் தாமதமாக கடந்துள்ளார்.
தன்னம்பிக்கை தகரவில்லை:
"கர்ப்பமான வயிற்றுடன் ஓடினாலும் நான் மிகவும் தன்னம்பிக்கையாகவே உணர்ந்தேன்" பந்தயத்தில்வென்ற பின்பு அல்சியா கூறிய வாசகங்கள் இவை.
சாதனை மங்கை:
28 வயதான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான இவர் ஹார்னட்ஸ்டேடியத்தில் குவிந்திருந்த ரசிகர் கூட்டத்தினரின் ஆரவாரத்திற்கு இடையில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
விண்ணைப் பிளந்த ஆரவாரம்:
தன்னுடைய முதல் சுற்றை அல்சியா முடித்த போது அனைத்து ரசிகர்களும் தங்களுடைய அமர்க்களமான மகிழ்ச்சியை அளித்தனர். வெற்றிக் கோட்டை அவர் தொட்டபோது மகிழ்ச்சி சப்தம்விண்ணையே பிளந்தது.
வெற்றியே லட்சியம்:
"நான் சாதாரணமாக சுற்றுப்பாதையைக் கடக்க விரும்பவில்லை. 800 மீட்டர் சுற்றுப்பாதையயும் கடந்து வெற்றிக்கோட்டை அடையவே விரும்பினேன்" என்று கூறியுள்ளார் அவர். அல்சியாவின்மருத்துவர்களும் வெறும் சரியுடன் நிறுத்தி விடாமல் அல்சியாவிற்கு சிறந்த ஊக்கத்தை அளித்துள்ளனர்.
பயமெல்லாம் மனதில் இல்லை:
"ஒரு பெண் கர்ப்ப வயிற்றுடன் ஓடினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் போன்ற பயத்தை எல்லாம் நான் தூக்கி எறிந்துவிட்டுதான் ஓடினேன். நான் கர்ப்பமாக இருக்கின்றேன் அவ்வளவேதான். இதற்காக என்னுடைய தினசரி செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை" என்றுகூறியுள்ளார் அல்சியா.
நம்பிக்கை நட்சத்திரம்:
கர்ப்பமான நேரத்தில் நடக்கவே பயப்படும் பெண்களுக்கு மத்தியில், குழந்தையை சுமந்து கொண்டு ஓடி சாதனை படைத்துள்ள அல்சியா பெண்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது மிகையில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications