உயிரோடு புதைக்கப்பட்ட 16 வயது கர்ப்பிணி சவப்பெட்டிக்குள் கண் விழித்தார்
ஹோண்டுராஸ்: ஹோண்டுராஸில் உயிருடன் புதைக்கப்பட்ட 16 வயது கர்ப்பிணி கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள லா என்ட்ராடாவைச் சேர்ந்தவர் நெயேசி பெரேஸ்(16). அவரது கணவர் ரூடி கொன்சாலஸ். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவரது வீட்டிற்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெரேஸ் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வாயில் இருந்து நுரையாக வந்துள்ளது.

இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை தீய சக்தி ஆட்கொண்டதாக நினைத்து உள்ளூர் பூசாரியை அழைத்து பூஜை செய்ய வைத்துள்ளனர். உயிரற்றவர் போல இருந்த பெரேஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரேஸின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட 24 மணிநேரம் கழித்து கல்லறைக்கு ரூடி சென்றுள்ளார். அப்போது கல்லறையில் இருந்து பெரேஸின் சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கல்லறையை உடைத்து சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது பெரேஸ் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சவப்பெட்டியில் உள்ள கண்ணாடியை பெரேஸ் உடைத்தபோது அவரது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரேஸ் இம்முறை நிஜமாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications