அமெரிக்காவில் திருடனை துரத்திச் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவம்
மிஷிகன்: அமெரிக்காவில் தனது பர்ஸை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை துரத்திச் சென்ற கர்ப்பணிக்கு பிரசவம் ஆனது.
அமெரிக்காவில் உள்ள மிஷிகன் மாநிலம் பிளின்டைச் சேர்ந்தவர் மார்க் நியூட்டன்(30). அவர் செவ்வாய்க்கிழமை கடைத் தெருவுக்கு சென்றுள்ளார். அப்போது கர்ப்பிணி ஒருவர் பலசரக்கு கடையில் வாங்கிய பொருட்களை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது காரில் ஏற்றிக் கொண்டிருந்ததை நியூட்டன் பார்த்தார். உடனே அவர் அந்த பெண்ணின் கையில் இருந்த பர்ஸை பறித்துக் கொண்டு ஓடினார்.
உடனே அந்த கர்ப்பிணி நியூட்டனை துரத்திச் சென்றார். நியூட்டன் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை பிடித்து கீழே தள்ளினார். அப்போது அங்கிருந்தவர்களில் 2 பேர் நியூட்டனை பிடித்து அவரிடம் இருந்த கர்ப்பிணியின் பர்ஸை மீட்டனர். நியூட்டன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கர்ப்பிணியின் குடும்பத்தார் போலீசார் வரும் வரை அவரை பிடித்து வைத்திருந்தனர்.
போலீசார் நியூட்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications