கலிபோர்னியா ஜோடியின் திருமணத்தன்று இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழையா விருந்தாளியாக ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலிபோர்னியா மாநிலத்திற்கு சென்றார். அங்கு உள்ள லா ஜோல்லாவில் இருக்கும் டோரி பைன்ஸ் கோல்ப் கோர்ஸில் கோல்ப் ஆடச் சென்றார். அப்போது அங்கு பிரையன், ஸ்டெபனி ஆகியோருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

ஒபாமா கோல்ப் ஆடிக் கொண்டிருக்கிறார் அதனால் ஒன்று நீங்கள் உடனே மோதிரம் மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது அவர் விளையாடிவிட்டு செல்லும் வரை காத்திருங்கள் என அதிகாரிகள் பிரையன், ஸ்டெபனியிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த தம்பதி ஒபாமா விளையாடிவிட்டு செல்லும் வரை காத்திருக்க முடிவு செய்தனர். அப்படியே அவர்கள் ஒபாமா விளையாடுவதையும் பார்க்க நினைத்தனர். நீங்கள் அவர் அருகே சென்றால் அவர் நிச்சயம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என ஸ்டெபனி, பிரையனிடம் அவர்களின் புகைப்படக் கலைஞர் எரின் தெரிவித்தார்.
உடனே ஸ்டெபனி ஒபாமா இருக்கும் பகுதிக்கு செல்ல அவரும் சிரித்தபடியே அந்த ஜோடியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். முன்னதாக கடந்த ஆண்டு ஹவாயில் ஒபாமா கோல்ப் விளையாட ஏதுவாக ஒரு ஜோடியின் திருமண நிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தையே மாற்ற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications