சிக்கலில் சீனா.. “ஆமா பொருளாதார நெருக்கடி இருக்கு..” ஜி ஜின்பிங் ஒப்புதல்! மீண்டு வர தீவிர முயற்சி
பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட சீனா, கடந்த ஆண்டில் தொடர் சரிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டு உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், இந்த பொருளாதார சிக்கலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதிலிருந்து நாடு விரைவில் மீட்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனா பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் சீன தயாரிப்பு பொருட்கள்தான் அதிக அளவில் பரவி கிடக்கின்றன. இந்த அளவுக்கு பலமிக்க பொருளாதாரம், கொரோனா தொற்றுக்கு பின்னர் மெல்ல சரிவை கண்டிருக்கிறது. இந்த சரிவு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் நாடு இதிலிருந்து மீண்டுவிடும் எனவும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால் 2023ம் ஆண்டில் இந்த மீட்சி ஏற்படவில்லை. இந்நிலையில், புத்தாண்டு உரையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், இந்த பொருளாதார சிக்கலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதிலிருந்து நாடு விரைவில் மீட்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஜி ஜின்பிங் பேசியதாவது, "கடந்த ஆண்டு மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது. மக்கள் வேலை தேடுவதிலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இதற்கு எதிராக நாங்கள் நாட்டின் நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக உழைத்து வருகிறோம். பொருளாதார மீட்சியின் வேகத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவோம். இந்த அரசின் குறிக்கோள், மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதுதான். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளையும், முதியோர்களுக்கு சுகாதாரத்தையும் நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
சீனா உலகின் பல நாடுகளை காட்டிலும் வித்தியாசமான பொருளாதார முறையை பின்பற்றி வருகிறது. கல்வி, மருத்துவம் என்பது அந்நாட்டின் அடிப்படை வசதிகளில் ஒன்று என்பதால் இதற்காக நிறையை மெனக்கெடுகிறது. அதேநேரம் எந்த மாதிரியான கொள்கைகளை சீனா பின்பற்றி வருகிறது என்பதை வரையறுப்பது கடினமாக இருக்கிறது. அல்லது கொள்கை குறித்த வெளிப்படைத்தன்மையை சீன அரசு விரும்பவில்லை.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சீனாவிலிருந்து முதலீடுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கி திரும்பி இருக்கின்றன. மட்டுமல்லாது வீடியோ கேம் குறித்த அந்நாட்டு அரசின் சமீபத்திய அறிவிப்பு, வீடியோ கேம் நிறுவனங்களிடையே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இவையெல்லாம் சேர்ந்து சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில் தைவான் விவகாரத்தில் சீனா காட்டி வரும் கறார் தன்மையும், சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில்தான் சீனா போராடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை 5%க்கு உயர்த்துவதே சீனாவின் தற்போதைய நோக்கம். இந்த சவால்களில் சீனா வெல்கிறதா? என்பது ஏப்ரல் மாதத்தில் தெரிந்துவிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications