Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டன் குட்டி இளவரசர் போட்டோவை வெளியிட்டது அரச குடும்பம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரிட்டன் குட்டி இளவரசர் போட்டோ வெளியானது-வீடியோ

    லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தின் புதிய குட்டி இளவரசர் லூயிசின் போட்டோவை அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

    சார்லஸ்-டயானா தம்பதிகளின் முதல் மகன் இளவரசர் வில்லியம். இவர் கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் கேத் மிடில்டன் என்பவரை திருமணம் செய்தார்.

    உலகமே வியக்கும் அளவுக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற மகன் பிறந்தார். இவர் பிரிட்டனின் இளவராசர் ஆவார்.

    இளவரசி சார்லெட்

    இளவரசி சார்லெட்

    இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சார்லெட் என்ற மகள் பிறந்தார். இவர் பிரிட்டன் இளவரசி ஆவார்.

    மூன்றாவதாக ஆண் குழந்தை

    மூன்றாவதாக ஆண் குழந்தை

    இந்நிலையில், இந்த தம்பதிக்கு மூன்றாவதாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. லூயிஸ் ஆர்தர் சார்லஸ்என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தை இங்கிலாந்து அரியணையின் 6வது வாரிசாகும்.

    ராணியின் கொள்ளு பேரனாகும்

    இதேபோல கடந்த சனிக்கிழமை தன்னுடைய 92வது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து ராணி எலிசபெத் IIவின் 3வது கொள்ளு பேரனாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பு இந்தக் குழந்தை பெண்ணாக இருக்கும் என்று இங்கிலாந்து மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

    2 போட்டோ வெளியீடு

    2 போட்டோ வெளியீடு

    இந்நிலையில் குட்டி இளவரசரின் போட்டோவை பிரிட்டன் அரசு குடும்பம் முதல்முறையாக வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசரின் 2 படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கொஞ்சும் இளவரசி

    கொஞ்சும் இளவரசி

    அதில் ஒரு புகைப்படத்தில், குட்டி இளவரசர் துாங்குகிறார். மற்றொரு புகைப்படத்தில் இளவரசி சார்லெட் தனது தம்பியை முத்தமிட்டு கொஞ்சுகிறார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பகீரப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+