கைதியுடன் 2 முறை கசமுசா... இந்திய வம்சாவளி சிறை வார்டனுக்கு 15 மாத சிறை
சுர்ரே: இங்கிலாந்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியுடன் உறவு வைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறை வார்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் பெயர் அம்ரித்பால் அலுவாலியா. 31 வயதாகிறது. இவர் சுர்ரே மாவட்டத்தில் உள்ள பிரான்ஸ்பீல்ட் என்ற இடத்தில் உள்ள சிறையில் வார்டராக இருக்கிரார். திருமணமானவர். இவர் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 வயதான கோலெட் ஓ பிளாஹெர்ட்டி என்ற கைதியுடன் 2 முறை செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஒருமுறை அந்தக் கைதியின் அறைக்குள்ளேயே போய் உல்லாசமாக இருந்துள்ளார். இது அதிகாரிகளுக்குத் தெரிய வரவே அலுவாலியா கைது செய்யப்பட்டார். கோர்ட் விசாரணையின்போது நடந்ததை ஒத்துக் கொண்டார் அலுவாலியா. இதையடுத்து அவருக்கு தற்போது 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ல் இருவருக்கும் இடையே மோகம் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக 6 ஆண்டு தண்டனையை அந்தப் பெண் கைதி அனுபவித்து வருகிறார். அவர் சிறையில் உள்ள சலூனில் பெண் கைதிகளுக்கு முடி வெட்டும் வேலையைச் செய்து வந்தார். அப்போதுதான் இவருக்கும், அலுவாலியாவுக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்டு காதல் கொண்டனர்.
பின்னர் சலூனில் வைத்து முதல் முறை உறவு கொண்டனர். அதன் பின்னர் அப்பெண்ணின் அறைக்குப் போய் அலுவாலியா உறவு வைத்துக் கொண்டார்.
முதலில் செக்ஸ் வைத்துக் கொள்ள அப்பெண் தயங்கியுள்ளார். ஆனால் அலுவாலியாதான், இதில் தப்பில்லை என்று கூறி பேசிப் பேசி அவரை சம்மதிக்க வைத்தாராம்.
ஆனால் இது சிறையில் உள்ள ஜிம் அதிகாரி மூலம் வெளியில் கசிந்து போலீஸ் வரைக்கும் போய் விட்டது. மேலும், சிசிடிவி ரகசியக் கேமராவிலும் அலுவாலியா செய்த செயல் அம்பலமாகி விட்டது.
பிரான்ஸ்பீல்ட் சிறையானது தனியார் நடத்தும் சிறையாகும். இங்கு 600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 2009ம் ஆண்டு முதல் அலுவாலியா வேலை பார்த்து வருகிறாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications