மனைவி அளித்த ஏமாற்றம்... ஆத்திரத்தில் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஜெயில் கைதி!

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் கிறிஸ்துமஸ் தினத்தில் மனைவி பார்க்க வராததால், கைதி ஒருவர் ஆத்திரத்தில் தனது பிறப்புறுப்பை அறுத்து எறிந்தார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

prisoner cuts off his penis after wife snubs Christmas Eve visit to jail

ஸ்பெயின் நாட்டில் உள்ள புவேர்டோ டி சாண்டா மரியாவில் புவேர்ட்டோ சிறை உள்ளது. கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க இந்த சிறையில் சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சிறைக்கைதிகள், சிறைக்குள் உள்ள தனி அறையில், தனது மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகை அவ்வப்போது வழங்கபபடும். இதற்காக தனி அறையும், குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்படும்.

இந்த நிலையில் அந்த ஜெயிலில் உள்ள ஒரு கைதியை கிறிஸ்துமஸ் தினத்தில் அவரது மனைவி பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான அவர் அடக்க முடியாத கோபத்தில் தனது பிறப்புறுப்பை அறுத்து வீசியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல நாட்கள் அழைப்பு விடுத்தும் மனைவி தன்னுடன் வந்து உடலுறவு கொள்ள மறுத்ததால், அந்த கைதி இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. அவர் அந்த நபருக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். துண்டிக்கப்பட்ட பிறப்புறப்பை மீண்டும் இணைக்க முடியுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் மருத்துவர்கள் அதற்காக முயற்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+